செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:02 IST)

இந்தியாவின் முதல் மாற்றுபாலின ஜோடிக்கு பிறந்த குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

baby
இந்தியாவின் முதல் மாற்றுபாலின ஜோடிக்கு பிறந்த குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய இந்தியாவின் முதல் மாற்றுபாலின ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
சஹத்-ஜியா ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மாற்று பாலின அறுவை சிகிச்சை கொண்டார் சஹத்.
 
பெண்ணாக இருந்த சஹ்த் மாற்றுப்பாலின சிகிச்சையால்மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும் கருப்பைகள் அகற்றப்படவில்லை என்பதும் இதனை அடுத்து ஜியாவின் விந்தணுவை சோதனை கூடத்தில் கருவாக வளர்த்து அதன் பிறகு சஹத் கருப்பையில் வைத்து கர்ப்பமானார் 
 
இந்த நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவின் முதல் முறையாக மாற்று பாலின ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva