வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (07:54 IST)

வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா: டிரா செய்யுமா இந்தியா?

வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா: டிரா செய்யுமா இந்தியா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி இந்தியா போட்டியை டிரா செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 94 ரன்கள் முன்னிலை கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது உணவு இடைவேளை வரை அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து உள்ளதால் 293 ரன்கள் முன்னிலையில் உள்ளன
 
300 ரன்களுக்கு மேல் முன்னிலை அடைந்தால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகும். எனவே இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் இந்த போட்டியை டிரா செய்யலாம் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி டிரா செய்யுமா அல்லது ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்