மருத்துவமனையின் கவனக்குறைவால் தீ விபத்தா?

Sugapriya Prakash| Last Modified சனி, 9 ஜனவரி 2021 (09:59 IST)
மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி. 

 
மகாராஷ்டிரா மாநிலம் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் இன்று அதிகாலை 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.  
 
மேலும், தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தீ விபத்து எப்படி ஏற்பட்டது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. 
 
மேலும் இந்த விபத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என குற்றம்சுமர்த்தப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :