திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (08:01 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. தரவரிசையில் முதலிடம்..!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி தொடர்ந்து தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 17ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.  

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 120 ரன்களும் எடுத்த நிலையில் முதலில் 283 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு வெறும் 26 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த ரன்களை அந்த அணி விக்கெட் இழப்பின்றி  ஏழாவது ஓவரிலேயே எடுத்து விட்டதை அடுத்து அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.  

ஆட்டநாயகனாக டிராபிக் ஹெட் அறிவிக்கப்பட்டார்.  இந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து வரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியா இரண்டாவது இடத்திலும் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva