செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (19:34 IST)

சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து!

chennai- flying bridge
சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் பாலப் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை- வேளச்சேரி- பரங்கிமலை இணைக்கும் பறக்கும் ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று, ஆதம்பாக்கம் தில்லை  கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானது.

கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி இடிந்து,  விழுந்து ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானது.

இரு தூண்களுக்கு இடையே 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை ; இவ்விபத்து பற்றி ஆதம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆதம்பாக்கம் தில்லை  கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானதால், அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.