1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:19 IST)

கேப்டன் உங்கள எப்பவும் மிஸ் பண்ணுவோம்… இரங்கல் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செயய்ப்படவுள்ளது.

தற்போது அவரடு உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு கோயம்பேடு அவர்கள் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த் மறைவு குறித்து “கேப்டன், நீங்கள் அனைவராலும் உங்கள் இழப்பை உணரச்செய்துள்ளீர்கள்… எப்போதும்” என பதிவிட்டுள்ளார்.