1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (15:12 IST)

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குனருக்கு Y’ பிரிவு பாதுகாப்பு!!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

 
பாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 
 
இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியான நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
Y’ பிரிவு பாதுகாப்பின் கீழ் அவருக்கு 8 காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள், அதில் இரண்டு கமாண்டோ படையினரும் அடங்குவர்.