ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன்

சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன்
Last Modified சனி, 14 மார்ச் 2020 (21:37 IST)
சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இன்று சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே என்ற கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் சென்னை
அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் பாதியில் 1-0 என்ற முன்னிலையில் இருந்த கொல்கத்தா அணி, ஆட்ட நேர முடிவின்போது 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து சென்னையின் கோப்பை கனவு தவிடுபொடி ஆயிற்று.

இருப்பினும் இருப்பினும் இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் படுமோசமாக விளையாடிய சென்னை அணி, அதன்பின்னர் மீண்டும் சுதாரித்து இறுதிப்போட்டி வரை வந்ததே பெரிய விஷயம் என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :