புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (08:00 IST)

புத்த துறவியானாரா தல தோனி?? – வைரலான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

புத்த துறவி போல உடையணிந்த இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி கடந்த 2019 உலக கோப்பை தோல்விக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் அவர் சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கான பயிற்சியிலும் இருந்தார்.

இந்நிலையில் தற்போது தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மொட்டையடித்து புத்த துறவி போல உடையணிந்து தியானம் செய்வது போல உள்ள அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தோனி துறவியாகி விட்டாரா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அது ஒரு நிறுவன விளம்பரத்திற்காக போடப்பட்ட கெட்டப் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.