செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (23:29 IST)

கடைசி ஓவரில் பாகிஸ்தான் திரில் வெற்றி: இந்தியா போராடி தோல்வி

ind vs pak
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது
 
182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 70 ரன்கள் எடுத்து  வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது