செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (10:55 IST)

டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்: விவரம் உள்ளே

கேப்டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 100% அபராதமும், பான்கிராப்டிற்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் ஐசிசி விதித்துள்ளது.
 
இதனால் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கபடும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர்கள் அடுத்த நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது.