1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2023 (08:05 IST)

முதல் ஐபிஎல் விக்கெட் எடுத்த அர்ஜூன் தெண்டுல்கர் .. குவியும் வாழ்த்துக்கள்..!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஐதராபாத் அணி விளையாடியது. 
 
20வது அர்ஜூன் தெண்டுல்கர் சூப்பரான வீசினார். அந்த ஓவரில் அவர் பெரும் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு ஐந்தாவது பந்தில் விக்கெட்டையும் எடுத்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்
 
ஏற்கனவே ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் அர்ஜுன் தெண்டுல்கர் விளையாடிருந்தாலும் நேற்றுதான் அவர் தனது முதல் விக்கெட்டை எடுத்தார் என்பதும் அவருக்கு சச்சின் உள்பட பல பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva