1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (08:29 IST)

சர்ச்சை டிவீட்… அடுத்ததாக சிக்கிய ஆண்டர்சன்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சிலர் வரிசையாக தங்களது தவறான கருத்துகளுக்காக இப்போது விவாதப் பொருளாகியுள்ளனர்.

சமீபத்தில் நியுசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஆலி ராபின்சன். ஆல்ரவுண்டரான இவர் 7 விக்கெட்களையும் 42 ரன்களையும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்து பிரபலமானார். அதே சமயம், அவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நிறவெறி மற்றும் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்திருந்தவையும் பகிரப்பட்டு அவருக்குக் கண்டனங்கள் எழுந்தன. இதனால் அவர் தற்காலிகமாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார். அவரைப் போலவே மோர்கன் மற்றும் பட்லர் ஆகியோரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக இப்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சக வீரரான பிராடை ஆபாசமாக சித்தரித்து பகிர்ந்த டிவீட்டும்(அந்த டிவீட் நீக்கப்பட்டுள்ளது) இப்போது கண்டனங்களைப் பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள ஆண்டர்சன் ‘அது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நான் இப்போது மாறியுள்ளேன். இப்படியான பழைய விஷயங்களைப் பார்த்து, அதில் நாம் செய்த தவறுகள் என்ன என்பதைக் கற்க வேண்டும்.’ என வருத்தம் தொனிக்கும் விதமாக பேசியுள்ளார்.