வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (07:57 IST)

மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோர் டெலிவரிக்கும் அனுமதி… அறிவித்த மாநில அரசு!

புதுச்சேரியில் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாவதைத் தடுக்கும் விதமாக டோர் டெலிவரிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 42 நாட்களாக ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி ஊரடங்கில் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுக்கடைகளில் அதிகமான அளவில் கூட்டம் சேர்ந்து மீண்டும் தொற்றுப் பரவும் ஆபத்து இருப்பதால், டோர் டெலிவரி செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டுக்கு வந்து மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.