முதல் தர கிரிக்கெட்டில் 1000 விக்கெட்கள்… ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை!


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1000 முதல் தர விக்கெட்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

தற்போது விளையாடிவரும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்பவர் ஜேம்ஸ் ஆனடர்சன். அதுபோலவே டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மெக்ரத்தின் சாதனையையும் அவர் கடந்த ஆண்டு தகர்த்தார். இந்நிலையில் தற்போது கவுண்ட்டி கிரிக்கெட்டில் கெண்ட் அணிக்காக விளையாடி வரும் ஆண்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 1000 விக்கெட்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் நிகழ்த்தியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :