புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (18:03 IST)

கோலியை பாபர் ஆசாமோடும், சச்சினோடும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்… கோபமான வேகப்பந்து வீச்சாளர்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோலியை மற்ற வீரர்களோடு ஒப்பிடுவது குறித்து பேசியுள்ளார்.

இன்று உலகக் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் ஒரு சில பேட்ஸ்மேன்களில் கோலி முதன்மையானவராக இருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசமோடு அவரை ஓப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள சோயிப் அக்தர் ‘பாபர் ஆசாம் முதலில் கோலி போல 20000 ரன்கள் சேர்க்கட்டும். நீண்ட ஆண்டுகள் பார்மோடு விளையாடட்டும். அப்புறம் அவரைக் கோலியோடு ஒப்பிடலாம். அதேபோல கோலியை சச்சினோடு ஒப்பிடுவதையும் நிறுத்துங்கள். சச்சின் அவர் காலத்தில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் பவுலர்களை எதிர்கொண்டார். இப்போது எத்தனை பவுலர்கள் அந்த வேகத்தில் வீசுகிறார்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.