திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (21:16 IST)

மழையால் 9 ஓவர்கள் குறைப்பு: ஆப்கானிஸ்தானுக்கு 187 இலக்கு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி  33 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. அதன்பின் மழை நின்றபின் மீண்டும் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது
 
இலங்கை அணியின் பெரரே 78 ரன்களும்,  கருனரத்னே 30 ரன்களும், திரமின்னே 25 ரன்களும் எடுத்தனர். இலங்கையின் ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 4 விக்கெட்டுக்களையும், ஜாட்ரான், ரஷித்கான் தலா 2 விக்கெட்டுக்களையும், ஹமித் ஹாசன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் டக்வொர்த் லீவீஸ் முறையின்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓவரில் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்து வரும் ஆப்கானிஸ்தான் சற்றுமுன் வரை 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.