வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (18:16 IST)

இலங்கை 182 / 8… ஆப்கானிஸ்தான் அபார பந்து வீச்சு – மழையால் ஆட்டம் பாதிப்பு !

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசி 182 ரன்களுக்குள் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளது.

உலகக்கோப்பையின் 7 ஆவது போட்டி இன்று கார்டிஃப் மைதானத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் டாஸில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தும் பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் 33 ஓவர்கள் முடிவில் 183 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இதற்கிடையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கன் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை சார்பாக குஸால் பெரேரா அதிகபட்சமாக 78 ரன்கள் சேர்த்தார்.