மே.இ.தீவுகள் அணிக்கு அதிர்ச்சி தோல்வி: ஆப்கன் அபார வெற்றி!

Last Modified ஞாயிறு, 17 நவம்பர் 2019 (08:19 IST)
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக லக்னோ நகரில் நடைபெற்று வருவது தெரிந்ததே. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் டி20 போட்டியிலும் வென்றது
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆப்கன் அணியினர்களின் அபார பந்துவீச்சு காரணமாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது
ஆப்கானிஸ்தான் அணியின் கரீம் ஜெனாட் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை தட்டிச்சென்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் அடுத்த போட்டியில் இன்று நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :