1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated: திங்கள், 15 நவம்பர் 2021 (16:18 IST)

சி எஸ் கே வின் வெற்றி ரகசியத்தை அவர் பகிர்ந்துகொண்டார்… ஆரோன் பின்ச் ஓபன் டாக்!

ஆஸி அணியின் வீரர் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்காக விளையாடினார்.

நேற்றிரவு நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நியுசிலாந்தை எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸி அணியின் ஹேசில்வுட், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியை எளிதாக்கினர். கோப்பையை வென்ற பின்னர் பேசிய ஆஸி அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஹேசில்வுட் சிஎஸ்கேவின் வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டதாக கூறியுள்ளார்.

அதில் ‘ஹேசில்வுட் எங்களிடம் சிஎஸ்கே வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இறுதிப் போட்டியில் எவ்வாறு எந்த லைனில் பந்துவீசுவது என்று அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் தொடரில் ஹேசில்வுட் சிறப்பாக செயல்பட்டது எங்களுக்கு பேருதவியாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.