இந்திய அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது – பாராட்டித் தள்ளிய மிஸ்டர் 360!

Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (13:38 IST)

இந்திய அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் டெஸ்ட்டான அடிலெய்ட் தோல்விக்கு பின்னர்
மீண்டு வந்து தொடரை வென்றிருப்பது உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டே பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் இப்போது மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் வெற்றியைப் பார்த்து மிஸ்டர் 360 என அழைக்கப்படும் ஏ பி டிவில்லியர்ஸ் ‘என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் மேட்ச். ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டம். இந்திய அணியின் பலம் பயமுறுத்தும் விதமாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அதன் உச்சபட்ச சிறப்பான தருணத்தில் உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :