இந்திய ஆஸ்திரேலிய தொடர் – இரு நாட்டு பிரதமர்களின் டிவிட்டர் உரையாடல்!

Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (08:04 IST)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள ஆஸி பிரதமர் ஸ்காட்மோரிசன்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இரண்டாவது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக ‘
டெஸ்ட் தொடரில் ஒரு பெரிய வெற்றியை பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்.
சிறந்த அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு இடையிலான போட்டியாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணி மீண்டுவர வாழ்த்துகள். ‘ எனக் கூறியிருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய பிரதமர் மோடி ‘நன்றி ஸ்காட் மோரிசன். இந்த தொடர் பரபரப்பான தொடராக இருந்தது. இந்த தொடர் வலுவான போட்டியாளர்களையும் உறுதியான கூட்டாளிகளையும் உருவாக்கியுள்ளது’ என பதிலளித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :