1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 27 ஜனவரி 2022 (08:46 IST)

சென்னை அருகே 500 ஏக்கரில் விளையாட்டு நகரம்!

சென்னை அருகே 500 ஏக்கரில் விளையாட்டு நகரம்!
சென்னை அருகே 500 ஏக்கரில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னை கிழக்குக் கடற்கரை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை இடையே 500 ஏக்கர் பரப்பளவில் மிக விளையாட்டு நகரம் அமைக்க இருப்பதாகவும் இதற்கான அரசு நிலம் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைய இருக்கும் இந்த விளையாட்டு நகரம் சர்வதேச தரத்துடன் நவீன வசதிகளுடன் இருக்கும் என்றும் மாநிலம் தழுவிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கே பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு வசதிகளும் இந்த விளையாட்டு நகரத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது