வியாழன், 5 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2016 (03:55 IST)

3-வது டெஸ்ட்: இந்தியா 285 ரன்கள் முன்னிலை

3-வது டெஸ்ட்: இந்தியா 285 ரன்கள் முன்னிலை

இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கான 3-வது டெஸ்ட் போட்டி, கிராஸ் தீவில் நடைபெற்று வருகிறது.


 


முதல் இன்னிங்சில் இந்தியா 353 ரன்கள் எடுத்த நிலையில்  மொத்த விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள், 225 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்களையும் இழந்தது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது, 39 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், 3 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 157 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து களத்தில் இருக்கிறார். அவருடன் ரோகித் ஷர்மா 41 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இந்தியா 285 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.