நியூசிலாந்து அபார பேட்டிங்: இந்தியாவுக்கு 213 இலக்கு
இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே அடித்து விளையாடியதால் 10 ரன்ரேட் என்ற விகிதத்தில் ரன்கள் உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது. முண்ட்ரோ அபாரமாக விளையாடி 40 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். செய்ஃபெர்ட் 43 ரன்களும், கிராந்தோம் 30 ரன்களும் அடித்தனர்.
இந்திய தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டுக்களையும் புவனேஷ்குமார், அஹ்மது தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் 213 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.