செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (06:20 IST)

டிராவை நோக்கி செல்கிறது ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் மழை காரணமாக தற்போது ஒரு இன்னிங்ஸ் கூட முடியாத நிலையில் உள்ளது.


 

நேற்று முன் தினம் வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நேற்று 21 மட்டுமே வீசப்பட்டுள்ளது. போட்டிக்கு மழை இடையூறாக இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 32.5 ஓவர்களில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. புஜாரே 47 ரன்களுடனும், சஹா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இலங்கை அணி தரப்பில் லக்மால் 3 விக்கெட்டுக்களையும், ஷங்கா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.