திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (21:27 IST)

சிஎஸ்கே அணிக்கு 172 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்!

சிஎஸ்கே அணிக்கு 172 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்!
இன்று நடைபெற்று வரும் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு 172 என்ற இலக்கை ஐதராபாத் அணி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பெயர்ஸ்டோ களமிறங்கினார். பெயர்ஸ்டோ 7 ரன்களில் அவுட் ஆனாலும் வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர் அதன் பிறகு வந்த வில்லியம்சன் மற்றும் கேதார் ஜாதவ் அதிரடியாக விளையாடியதை அடுத்து ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணியின் நிங்கிடி 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் 172 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட சென்னை அணிக்கு இந்த இலக்கு மிக எளிதானது என்றாலும் இன்றைய போட்டியில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்