துபாய்ல இருந்த பாதுகாப்பு இங்க இல்லை! – ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆடம் ஜாம்ப்பா!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்ப்ரா இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மறுபுறம் ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடி வந்த ஆடம் ஜாம்ப்ரா ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி ஆஸ்திரேலியா சென்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் கிரிக்கெட் முக்கியமானதாக தோன்றவில்லை என்றும், கடந்த ஆண்டு துபாயில் ஐபிஎல் நடந்த போது அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அளவிற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.