1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (11:54 IST)

காமன்வெல்த் போட்டி - இந்தியாவிற்கு 12-வது தங்கம் ஷ்ரேயாசி சிங் அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று பெண்களுக்கான டபுள் டிராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் நடந்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா கோக்ஸ்சை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி சிங் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 12 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.