புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (13:51 IST)

ஒலிம்பிக் போட்டிகளைக் காண 10000 பேர்களுக்கு அனுமதி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க 10000 பேருக்கு அனுமதி வழங்கப்படும் என ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பாதுகாப்போடு அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஒலிம்பிக் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் போட்டிகளைக் காண 10000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று அதிகமானால் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.