தோனிதான் கோலிக்குக் கேப்டன் – சுரேஷ் ரெய்னா கருத்து !

Last Modified செவ்வாய், 28 மே 2019 (15:16 IST)
இந்திய அணிக்குக் கேப்டனாக கோலி இருந்தாலும் கோலிக்குக் கேப்டனாக தோனிதான் உள்ளார் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12 வது (ஒருநாள் கிரிக்கெட்) உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், ஜடேஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை. அதனால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. இந்நிலையில் கோலி மற்றும் தோனி குறித்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா டிவி நேர்காணல் ஒன்றில் பதில் அளித்துள்ளார். அதில் ‘இந்திய அணிக்கு கோலி கேப்டனாக இருந்தாலும் கோலிக்கும் சேர்த்து தோனிதான் கேப்டன். அவர் ஸ்டம்ப்புக்குப் பின்னால் இருந்து வீரர்களிடம் பேசுகிறார். பீல்டிங்கை அவர்தான் செட் செய்கிறார். அவர் கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன். அவர் இருக்கும் போது கோலிக்கு வேலைக் கம்மி.’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :