1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:37 IST)

கோஹ்லி சதம் ; ரஹானே அரைசதம் – வலுவான நிலையில் இந்தியா !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோலி சதமடித்துள்ளார்.
 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் 14 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் புஜாரா மற்றும் மயங்க் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியின் ரன் கூடியது. மயங்க் அகர்வால் 108 ரன்களிலும் புஜாரா 58 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேற அதன் பின் வந்த கோலி மற்றும் ரஹானே அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றனர். சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் கோலி தனது 26 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

சற்றுமுன்பு வரை இந்திய அணி 356 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்துள்ளது. கோலி 104 ரன்களோடும் ரஹானே 58 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

Kohli hits his 26th test century