வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 21 மே 2017 (23:30 IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சாம்பியன் ஆனது மும்பை அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் ஆன இறுதி போட்டி பெரும் பரபரப்புக்கு இடையே இன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதியது.


 


டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற நிலையில் புனே களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 44 ரன்கள் அடித்தபோதிலும் மும்பை அணி பந்துவீச்சாளர்கள் குறிப்பாக மலிங்காவின் பந்துவீச்சில் அனல் பறந்ததால் புனே அணி ரன்களை குவிக்க தடுமாறியது. இந்நிலையில் மேட்ச் ஃபினிஷர் என்று கூறப்படும் தோனி 10 ரன்களில் ஆட்டமிழந்ததால் மேட்ச் டென்ஷன் ஆனது.

இறுதியாக 2 ஓவர்களில் 23 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை புனேவுக்கு ஏற்பட்டது. அந்த ஓவரில் 12 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.

கடைசி ஓவரை ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழுந்ததால் கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை புனேவுக்கு ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை சாம்பியன் பட்டம் பெற்றது.