வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By bala
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (12:25 IST)

கிறிஸ்மஸ் படங்களின் வசூல் ஒரு பார்வை

கிறிஸ்மஸை முன்னிட்டு கத்தி சண்டை, பலே வெள்ளையத்தேவா மணல் கயிறு 2 உள்ளிட்ட சில படங்கள் வெளியாயின. முக்கியமான இன்னொரு படம், அமீர் கானின் தங்கல். இந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் இப்படம் வெளியானது.


 

இதற்கு முந்தைய வாரம் வெளியான வீர சிவாஜி, கடந்த வார இறுதியில் 1.09 லட்சங்களை மட்டுமே வசூலித்தது. நேற்று ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 78.40 லட்சங்கள். சுமாரான வசூல்.

மெல் கிப்ஸன் இயக்கத்தில் வெளியான ஆங்கிலப்படம் ஹட்ஷா ரிட்ஜ் விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இந்தப் படம் சென்ற வார இறுதியில் சென்னையில் 1.50 லட்சங்களை தனதாக்கியுள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல், 22.50 லட்சங்கள்.

ஒருகாலத்தில் ஹிட்டடித்த மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து சென்ற வாரம் வெளியிட்டனர். எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின்தான் நாயகன். இதிலிருந்தே படத்துக்கான வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் 3.90 லட்சங்களை மட்டுமே வசூலித்து ப்ளாப்பாகியுள்ளது.

வெங்கட்பிரபுவின் கம்பேக் மூவியான சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் சென்னை சிட்டியில் 12.80 லட்சங்களை வசூலித்த இந்தப் படம், இதுவரை சென்னையில் மட்டும் 3. 90 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.

கடந்த 23 -ஆம் தேதி வெளியான சசிகுமாரின் பலே வெள்ளையத்தேவா முதல் 3 தினங்களில் சென்னையில் 46.81 லட்சங்களை வசூலித்து சுமாரான வசூலை பதிவு செய்துள்ளது.

அதே 23 -ஆம் தேதி வெளியான இந்திப் படம் தங்கல் சென்னையில் மட்டும் 84.70 லட்சங்களை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை இந்தி, ஆங்கிலப் படங்கள் கைப்பற்றாமல் காப்பாற்றியிருக்கிறது, கத்தி சண்டை. சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, சூரி நடித்த இந்தப் படம் முதல் 3 தினங்களில் சென்னையில் 97.90 லட்சங்களை வசூலித்து ஓரளவு சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. ஆனால் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் இந்த ஓபனிங்கை படம் வரும் நாள்களில் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.