வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி நேர்மறை ஆற்றலை பெருக்க என்ன செய்யவேண்டும்...?

எதிர்மறை ஆற்றலையே (நெகடிவ் எனர்ஜி) தீய சக்திகள் என்று கூறுகிறோம். வாஸ்து அளவுகளில் மாற்றம் இருந்தாலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உண்டாகும்.  இது தவிர கண் திருஷ்டி, பொறாமை, மாந்திரீகம் போன்றவைகள் எதிர்மறை எண்ண அலைகள் மூலம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

வீட்டில் உள்ள தீய சக்திகளான எதிர்மறை ஆற்றலை நீக்குவதன் மூலம் குடும்பத்திற்கு நன்மையும், நமது உடலில் உள்ள ஆரா சக்தியின் நேர்மறை ஆற்றல் அளவு பாதிப்பு அடையாமல் பாதுகாக்கபடும். அத்தோடு உடல் ஆரோக்கியமும், குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலையையும் விலக்கி நிம்மதி, முன்னேற்றம், தொழில் விருத்தி, மனம் அமைதி போன்றவற்றை உண்டாக்கும்.
 
உடலில் உள்ள ஆரா சக்தி பாதிப்பு அடையாமல் இருக்க, வீட்டில் உள்ள எதிர் மறை சக்தியால் பாதிப்பு அடையாமல் இருக்கவும் இந்த பரிகார முறைகளை பின் பற்றினாலே போதும்.
 
கணபதி ஹோமம்: வருடம் தவறாமல் கணபதி ஹோமம் செய்து வந்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள், பில்லி, சூனியம், மாந்திரீக செயல்கள், எதிர்மறை சக்திகள்  விலகி நேர்மறை சக்தி அதிகரிக்கும். இதற்கு முறையாக கணபதி ஹோம மந்திரங்களை கற்ற மாந்திரீகர்களை வைத்து செய்வது சிறப்பு.
 
மூலிகை சாம்பிராணி: வெண்கடுகு, சாம்பிராணி, விஷ்னுகிரந்தி, கோரோஜனை,நொச்சி இலை போன்ற மூலிகைகளை சேர்த்து வீட்டில் மூலிகை சாம்பிராணி புகைக்க வீட்டில் உள்ள தீயவைகள் விலகி நன்மைகள் உண்டாவது உறுதி.
 
கல் உப்பு: வீட்டின் தரையை கல் உப்பு கலந்த கரைசலால் சுத்தம் செய்யவும். இதனால் எதிர் மறை சக்தியான தீய சக்தி நீங்கும். கல் உப்பிற்க்கு எதிர் மறை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் அதிகம்.
 
சூரிய வெளிச்சம்: சூரிய உதயத்தின் வெளிச்சம் வீட்டினுள் படுவதால் எதிர்மறை சக்திகள் விலகி. சூரிய வெளிச்சம் வழியாக ஊடுருவி வருகின்ற சக்தி நன்மை உண்டாக்கும் நேர்மறை ஆற்றல் வீட்டில் பரவும். காலை நேரத்தில் ஜன்னல், கதவுகளை திறந்து வையுங்கள்.
 
எலுமிச்சை பழம்: ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க எதிர்மறை சக்தியை தடுக்கும்.