வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

செவ்வாய் தோஷத்தை போக்கும் சில பரிகார முறைகள்...!!

பொதுவாக ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். அந்த ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய்  தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.

செவ்வாய்க் கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
 
செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தனக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
 
இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
 
செவ்வாய்க் கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
 
செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும்.
 
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
 
செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.