வாசலில் நிற்கும் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வர என்ன செய்யவேண்டும்...?
சில வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக தலை விரித்தாடுவதற்கு, எதிர்மறை ஆற்றல் தான் காரணமாக இருக்கும். எதிற்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் தெய்வங்கள் குடியேர தயங்க தான் செய்யும்.
எந்த ஒரு வீட்டில் தெய்வங்கள் குடி கொள்ளாமல், இருள் சூழ்ந்த நிலையில் இருக்கின்றதோ, கட்டாயம் அந்த வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வரும்.
இப்படிப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கான சுலபமான ஒரு தீர்வு உள்ளது. நம்முடைய வீட்டில், இந்த பரிகாரத்தை நாமே செய்து கொள்ள முடியும். சிகப்பு நிற காட்டன் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் போல பன்னீர், வாசனைப் பொருட்களான, ஜவ்வாது ஒரு சிட்டிகை, அக்தர் ஒரு சிட்டிகை, மல்லிகைப்பூ, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் இந்த சிவப்பு துணியை அந்த தண்ணீரில் நனைத்து முதலில் உலர வைத்துக் கொள்ளுங்கள்.
முனை உடையாத 3 விரலி மஞ்சளை எடுத்து, அதில் இந்த மூன்று மஞ்சளையும் வைத்து, சிகப்பு நூலால் ஒரு முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு இந்த முடிச்சுக்கு சந்தன பொட்டு, குங்கும பொட்டு வைத்து, உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை தீபத்தின் அருகில் வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, நில வாசப்படியில் ஒரு ஆணியில் இந்த முடிச்சை மாட்டிவிட வேண்டும்.
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு செய்யலாம். வாசலில் மாட்டிய இந்த முடிச்சுக்கு தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றும்போது, தூபம் காட்ட வேண்டும். மேலும் வீட்டு வாசலில் நிற்க கூடிய தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று பிரார்த்தனை இருக்க வேண்டும்.
11 நாள் கழித்து மாலை 6 மணிக்கு, வீட்டில் எப்போதும் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது போல செய்து, வாசலில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து பூஜை அறையிலேயே மீண்டும் ஒரு 5 நாட்கள் வைத்து பூஜை செய்து வர வேண்டும்.
உங்கள் வாசலில் 11 நாட்கள் வாசம் நிறைந்த இந்த மஞ்சளை வைத்து, மனநிறைவோடு வீட்டிற்குள் உங்களது தெய்வத்தை அழைக்கும் போதே, அந்த தெய்வமானது இந்த மஞ்சளில் குடியேறியிருக்கும். அதை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.