1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

புரட்டாசி மாதத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது தெரியுமா...?

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு இருக்கும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில், சூரியன் "கன்னி" ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. தென்திசை என்பது "எமதர்மன்" இருக்கும் திசையாகும்.
 
புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். புதனின்  நட்புக்கிரகம் சனி. எனவே இவரை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும். புதன் சகல கலைகளிலும் வல்லவர். புதன் புத்திக் கூர்மை, கற்றல் போன்றவற்றுக்கு அதிபதி. ஆகையால் இவரை வழிபடுகிறவர்களுக்கு அறிவைக் கொடுப்பார்.
 
புரட்டாசி மாதத்தில் செய்ய வேண்டியவை: பெருமாள் வழிபாடு, நவராத்திரி பூஜை, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக்கொள்ள தொடங்குவது சிறந்தது.
 
புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாதவை:  புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யப்படுவதில்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.