செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மஹாவிஷ்ணுவின் அருளைப்பெற செய்யவேண்டிய வழிபாடுகள் என்ன...?

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. 

ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர  வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும்.

மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள்  அமைந்து உள்ளது.
 
மகாவிஷ்ணுவிடம் வேண்டுதல்: இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவின்றி செய்யலாம்.
 
புண்ணிய காலத்தில் விரதம்: மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடியது இந்த புண்ய காலம். இந்த புண்ணிய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளும் ஸ்ரீமன் நாராயணனின் அருள் நிச்சயம் கிடைக்கும். 
 
ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
வளமான வாழ்க்கை அமையும்: விஷ்ணுபதி புண்ணிய கால தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களை தவிர்க்க வேண்டும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் அமையும்.