1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்...?

நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
 

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவங்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்தவுடனே ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.

பாமாயிலை சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும். தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால்  செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை (மூன்றாவது கண்ணை) திறக்கும். காதணி நல்ல கண்பார்வையைத் தரும். ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும். காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும். மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள  விஷகலையை நீக்கும்.