1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பதால் கிடைக்கும் பலன்கள்...!

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்.
தங்கள் முன் வாசலை திறந்து வைப்பார்கள். அதிகாலை இலக்குமி வீட்டிற்குள் வரும் நேரம் என்பது நம்பிக்கை. இவ்வதிகாலை பொழுதே பிரம்ம முகூர்த்தமாகும். இக்காலத்தில் எழுந்து படித்தால் ஒரு போதும் மனதிலிருந்து மறக்காது தலையில் இடது பக்கம் இருக்கும் கல்வி மையம் செயற்படும் போது  படிப்பது மிகவும் பயனைத் தரும் என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பு. இதனால் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும்.
 
பிரம்மமுகூர்த்ததில் எழுவதற்குறிய பழக்கத்தை நாமே பழகிக் கொள்ள வேண்டும். பிரம்மம் அறியப்படாதது போல பிரம்ம முகூர்த்தத்தின் இனிமையும் சாதரமாக அறிய முடியாதது. அந்நேரத்தில் எழுந்து அனுபவத்தாலே அதன் பயன் விளங்கும். இந்நேரத்தில் தெய்வங்களுக்கு ஜெபம் செய்து  மேன்மையடையலாம்.
 
தெய்வீகக் காரியங்கள் படிப்படியாக மேலோங்கி வளரும். சாதாரணமாக அந்நேரத்தில் அதாவது அதிகாலையில் எழுந்து எமது கடமைகளை செய்தால் அந்த நாள் முழுவதும் உற்சாகமும் மனஅமையும் கிடைப்பதை உணரலாம்.
 
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அதீத சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம்.
 
அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது.