திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

மணி பிளான்ட் வளர்க்க சிறந்த தென்கிழக்கு திசை!!

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
 
பாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும்  இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
விநாயகரின் திசை தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.