வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிவலிங்கத்தில் வகைகள் உண்டா? அவை உணர்த்தும் தத்துவம் என்ன...?

சிவலிங்கம்= சிவ + லிம் + கம்: சிவம் - இறைவர், லிம் - அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் - ஒடுங்கிய அப்பொருள்கள் (சராசரங்கள்) மீண்டும் தோன்றும் இடம்.
ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும் அழித்தும் அருளவும் வல்ல வடிவமே சிவலிங்கம் எனப்படும், சிவலிங்கத்தின் அடிப்பாகம் -  நாற்கோண வடிவினதாய் இருக்கும் - இது பிரம தத்துவம்.
 
சிவலிங்கத்தின் நடுப்பாகம் - எண்கோண வடிவினதாய் இருக்கும் - இது விஷ்ணு தத்துவம் (இது ஆவுடை எனப்படும்.)
 
சிவலிங்கத்தின் மேல் பாகம் - நீண்ட வட்ட வடிவினதாய் இருக்கும் - இது சிவ தத்துவம் (இது பாணம் எனப்படும்.)
 
இந்த பாணத்தின் அடிப் பாகத்தில் - உருத்திரனும், இந்த பாணத்தின் நடுப் பாகத்தில் - ஈசுவரனும், இந்த பாணத்தின் மேல் பாகத்தில் -  சதாசிவனும் இருக்கிறார்கள்.
 
இந்த சிவலிங்கம் என்பது இரண்டு வகைப்படும், அவை:
 
1. பரார்த்தலிங்கம் - (திருக்கோயில்களில் அனைவரும் வழிபடத் தக்க வகையிலே கருவறையில் எழுந்தருளியிருப்பது.)
 
2. ஆன்மார்த்தலிங்கம் அல்லது இஷ்ட லிங்கம் - (விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீக்கை பெற்று இல்லத்தில் வைத்து பூசிப்பது).
 
விஞ்ஞானிகள் அணுவை (எலக்ட்ரான்) ஆராய்ச்சி செய்தபோது, அந்த அணுவானது பச்சை நிறமான ஒரு வட்ட வடிவமாகவும், அதன் மீது ஒரு சோதியுமாக காட்சி தந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.
 
இந்த பச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன் மீதிருந்த சோதி இலிங்கமாகவும் காட்சியளித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை. இத்தகையை அற்புதமான இலிங்க வடிவத்தை, தமது ஞானக் கண்ணால் கண்டதெய்வச் சேக்கிழார் பெருமான்பெரிய  புராணத்தில் கூறியுள்ளார்.