செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

மனிதனின் வாழ்க்கையை உணர்த்தும் விஷ்ணுவின் அவதாரங்கள்...!

மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மனிதருக்கு வாழும் நெறியைக் காட்டிய அவதாரங்களில் ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் தனிச் சிறப்பைப் பெற்ற அவதாரங்கள்.
1. மச்ச அவதாரம்: தாயின் வயிற்றிலிருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
 
2. கூர்ம அவதாரம்: மூறாவது மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
 
3. வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
 
4. நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.
 
5. வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
 
6. பரசுராம அவதாரம்: வளர்த்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
 
7. பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
 
8. ராம அவதாரம்: திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
 
9. கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
 
10. கல்கி அவதாரம்: கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் எனவும் கூறப்படுகிறது.