புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஏகாதசி வகைகளும் விரதமிருக்கும் விதிமுறைகளும்....!!

வைகானஸன் ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். நமக்கு மட்டுமல்லாமல் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, காலைக்கடன் முடித்து குளித்து,ஏகாதசி விரதம்.வை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். 
 
முடியாத பட்சத்தில் சுவாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம். ஏகாதசியன்று துளசியை பறிக்கக்கூடாது. முதல்நாளே பறித்து  வைத்துக்கொள்ளவேண்டும். ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. முடிந்தால் இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். 
 
சினிமா பார்த்தல், ஊர்சுற்றுவது கூடாது. கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் சுவாமியைப் பூஜை செய்தப்பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. ஏகாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய்  ஆகியவற்றை உண்பது நல்லது.
 
ஏகாதசியில் 25 வகைகள் உள்ளது. அவை, உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி  என்பவையே 25 ஏகாதசிகளாகும்.
 
ஏகாதசி விரதமிருந்து நமது, நமது பிள்ளைகள் பாவம் மட்டுமல்லாமல் நமது முன்னோர்களின் பாவம் போக்கும் சக்தி கொண்டது.