மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம்...!
பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள், ரிஷிமார்கள், தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு. எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.
பொதுவான மந்திரம்:
ஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி
பதினெண்சித்தர் சாபம் நசிநசி தேவர்கள் சாபம் நசிநசி
மூவர்கள் சாபம் நசிநசி மூலிகை சாபம் முழுதும் நசிநசி.
குறிப்பு: மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்கு (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.
மூலிகை பிராண பிரதிஷ்டை
ஓம் மூலி மஹா மூலி ஜீவமூலி
உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.
குறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல் நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.
சர்வ வசிய மூலிகை:
ஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து துாப தீபங் காட்டி “அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.
அதிகாலையில் மூலிகை செடியை பிடுங்கும்போது, உடல் நலம் சீராக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, செடியை அடிவேர் அறுந்துவிடாமல் கவனமாக எடுத்து பயன்படுத்தினால் பயன் தரும்.