1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 11 மே 2022 (13:44 IST)

வீட்டில் பணவரவு அதிகமாக செய்யவேண்டிய சில விஷயங்கள் !!

அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். சிலர் வீட்டில் பணவரவு அதிகமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பணமானது செலவாகி கொண்டே இருக்கும்.


வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவற்றை வைக்கவும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்தால் வீட்டில் பணம் அதிகரிக்கும்.

வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கண்டிப்பாக ஒரு 100 ரூபாயாவது சட்டை பையிலோ அல்லது பர்சிலோ வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் பணத்தை ஈர்க்கும் சக்தி பணத்திற்கு தான் உண்டு.

தொழில் புரிவோர் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினமும் தொழிலை ஆரம்பிக்கும் முன்பு கடவுள்களுக்கு ஊதுபத்தியை ஏற்றுவதன் மூலம் பணவரவு உண்டாகும். வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர, வீட்டில் நிதி நிலைமை கட்டுக்குள் வரும்.