வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 மே 2022 (15:46 IST)

சனியினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும் பைரவ வழிபாடு !!

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என ஏழரைசனி பாதிப்பு நீங்கும்.


வாக்குச்சனியால் அவதிப்படும் விருச்சிக ராசியினர் அதிலிருந்து விடுபடுவர். ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் தனுசு ராசியினர் நிம்மதி அடைவார்கள். விரையச்சனியால் சேமிக்க முடியாமல் திண்டாடும் மகரம் ராசியினர் அதிலிருந்து மீள்வார்கள்.

அஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசியினர், அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள். கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.

வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.

தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள், ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது. மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.