வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (13:52 IST)

காரியத்தடை நீங்கி செல்வ வளம் பெருக சில ஆன்மிக குறிப்புக்கள் !!

செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.


ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து, மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.

ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கி தனலாபம் பெறலாம்.

கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.

வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.