வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (19:00 IST)

அனுமனுக்கு தாகம் தீர்த்த முருகன்.. கோவை அருகே உள்ள அனுவாவி கோவில் குறித்த தகவல்..!

அனுவாவி மலை குறிஞ்சி நிலத்துக்குச் சேரும் புனிதத் தலம். முருகப்பெருமான், அனுமனுக்கு அருள் புரிந்து, இங்கு தங்கி இருப்பதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. "அனு" என்பது அனுமனை குறிக்க, "வாவி" என்பது நீர் ஆதாரத்தை குறிக்கிறது.
 
அனுமன், சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் போது தாகம் ஏற்பட்டதால், முருகன் தன் வேலால் இங்கு ஒரு நீரூற்றை உருவாக்கினார். இந்த நீரூற்று, எந்த காலத்திலும் வறண்டு போகாது என்று கூறப்படுகிறது.
 
இத்தலத்தில் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இடும்பன் சன்னிதி, ஆஞ்சநேயர், விநாயகர், வீரபாகு, நவகிரகங்கள், சிவன் சன்னிதி போன்றவை உள்ளன. கோயிலுக்கு 423 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
 
குழந்தை பேறு வேண்டுவோர் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்க, இங்கு தாலி காணிக்கை செலுத்துவதை வழக்கமாகப் பார்க்கலாம்.
 
கோயில் நேரம்: காலை 6.30 - இரவு 8.30
அமைவிடம்: கோவை உக்கடத்திலிருந்து 26ஏ பேருந்து அனுவாவி கோவிலுக்கு செல்கிறது.

Edited by Mahendran